பிகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசின் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பாட்னாவுக்கு வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து காந்தி திடலுக்குப் புறப்பட்ட பிரதமரை, சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த மக்கள், முழக்கங்களை எழுப்பியவாறே மலர்களைத் தூவி வரவேற்றனர்.
பிகாரில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், முதல்முறையாக பாஜகவின் சாம்ராட் சௌதரி கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், பிகாரின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் காந்தி திடலில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள உள்ளனர்.
பிகாரில் முதல்வர் பதவியை வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி பொறுப்பேற்றுள்ளதால், இந்த நிகழ்வை பாஜகவினர் ஒரு உண்மையான கொண்டாட்டமாகவே கருதுகின்றனர்.
சௌத்ரியுடன் இணைந்து, ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சௌத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோரும் அமைச்சரவை உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
Summary
Prime Minister Narendra Modi arrived here on Thursday to attend in the Cabinet expansion event of the BJP-led NDA government in the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: பிரதமர் பெருமிதம்

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி சாலைவலம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


