ஃபால்டா தொகுதியில் பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் கூட போதாது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. வாக்குச் சாவடியிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளுக்கு மே 21-இல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே. 2) அறிவித்தது.
மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மக்ராத் பஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் ஃபால்டா தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபால்டா தொகுதியில் 10 ஆயுள் காலம் எடுத்துக்கொண்டாலும் பாஜக வெற்றி பெறாது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''10 ஆயுள் காலமானாலும் ஃபால்டா தொகுதியில் வெற்றி பெற பாஜகவால் முடியாது. எனது டைமண்ட் ஹார்பர் மாடலில் ஒரு சிறு கீறலைக் கூட ஞானேஷ் குமாரால் ஏற்படுத்த முடியாது.
உங்களிடம் உள்ள அனைத்தையும் எடுத்து வாருங்கள். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவால் விடுகிறேன். ஃபால்டாவுக்கு வாருங்கள்.
உங்கள் (பாஜக) மிக வலிமையானவரை அனுப்புங்கள். தில்லியில் காட்ஃபாதர்களுள் ஒருவராக இருப்பவரை அனுப்புங்கள். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், ஃபால்தாவில் போட்டியிடுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மாளவியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Summary
ten lifetimes womt be enough for bjp Trinamool Congress MP Abhishek Banerjee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

கொல்கத்தாவின் 11 தொகுதிகளிலும் திரிணமூல் வெல்லும் : சுதீப் பானர்ஜி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


