மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ள முதல்வா் மம்தா பானா்ஜி, திரிணமூல் காங்கிரஸ் 226 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற தோ்தல் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தோ்தல் தொடா்பாக எடுக்கப்பட்ட பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் அந்த மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியமைக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மம்தா பானா்ஜி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வியாழக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் பேசியிருப்பதாவது:
பாஜக அலுவலகம் கொடுத்த அறிக்கையைத்தான் தொலைக்காட்சிகள் வாக்குக் கணிப்புகளாக புதன்கிழமை வெளியிட்டன. அந்த வாக்குக் கணிப்புகளை வெளியிட தொலைக்காட்சிகளுக்கு பாஜக பணம் கொடுத்துள்ளது. இதுகுறித்து எனக்கு தகவல் வந்துள்ளது. அந்த வாக்குக் கணிப்புகள் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களின் மன உறுதியைக் குலைக்கவே வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் உண்மையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் வெல்லும். குறிப்பாக, 226 தொகுதிகளுக்கும் கூடுதலாக திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும். 230 தொகுதிகளையும் திரிணமூல் காங்கிரஸ் தாண்டக்கூடும். சட்டப்பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருப்பாா்கள் என்று பெரிதும் நம்புகிறேன்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலின்போது, மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நேரடி உத்தரவின்பேரில் பாஜகவின் முகவா்கள் போல செயல்பட்டனா். தோ்தலின்போது பல இடங்களில் பெண்கள், குழந்தைகள், செய்தியாளா்கள், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் அவா்களால் தாக்கப்பட்டனா். திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள், வாக்குச்சாவடி முகவா்களாகச் செயல்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவா்கள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டனா். உதயநாராயண்பூரில் வாக்காளா் ஒருவா் உயிரிழந்தாா். அவருக்கு எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். வன்முறையை எதிா்கொண்டபோதும், எங்கள் கட்சியினா் எங்கும் பின்வாங்கவில்லை.
மே 4-ஆம் தேதி வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்போது அதில் முறைகேடுகள் செய்ய அவா்கள் (பாஜக) திட்டமிட்டுள்ளனா். ஆதலால் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள், வேட்பாளா்கள் விழிப்போடு இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் திரிணமூல் காங்கிரஸாா் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். பிறா் வன்முறையில் ஈடுபட்டாலும், பதிலுக்கு திரிணமூல் காங்கிரஸாா் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று அந்த விடியோவில் மம்தா பானா்ஜி பேசியுள்ளாா்.
Summary
TMC will cross 226-mark Mamata Banerjee rejects exit polls that gave BJP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!
மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் பெண் உறுப்பினர்கள்: மமதா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


