மேற்கு வங்க சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் தொகுதிக்குட்பட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
பாரதிய ஜனதாவுக்கு மக்களின் ஆசி எப்போதுமே உண்டு, அதனால் தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம் என பாஜக பெண் வேட்பாளர் பூர்ணிமா சக்ரவர்த்தி இன்று தெரிவித்தார்.
மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களிலும் நாளை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தொகுதியில் உள்ள கோயில்களில் பூர்ணிமா சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''மக்கள் ஏற்கெனவே எங்களை (பாஜகவை) ஆசிர்வதித்துள்ளனர். எங்களுக்கு கடவுளின் ஆசியும் எப்போதும் உண்டு. தர்மம் நிச்சயம் வெல்லும். அது மேற்கு வங்க மக்களின் வெற்றியாக இருக்கும். மேற்கு வங்க கலாசாரம், இளைஞர்கள் மற்றும் தாய்மார்களின் வெற்றியாக இருக்கும். கடவுளின் ஆசியைப் பெறுவதற்காக கோயிலுக்கு வந்தேன். திரிணமூல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்படும். மே 4 ஆம் தேதி இங்கு தாமரை மலரும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
கதல் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சீதல் கபத், விசாலாட்சி கோயிலில் சாமிதரிசனம் செய்தார்.
பின்னர் பேசிய சீதல் பதக், ''மேற்கு வங்கத்தின் எதிர்காலத்துக்காக பிரார்த்தனை செய்துகொண்டேன். எங்கள் மேற்கு வங்கத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டியது என் கடமை. மேற்கு வங்கத்தில் 170 - 180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்'' எனக் குறிப்பிட்டார்.
கொல்கத்தா துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராகேஷ் சிங் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''பாஜக 170-180 இடங்களில் வெற்றி பெறும். மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் மோடியின் உத்தரவாதம் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அனைத்து ரெளடிகளும், அயோக்கியர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.'' எனப் பேசினார்.
Summary
People have already blessed us BJP candidates seek divine blessings at temples ahead of WB poll results
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


