தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை(சனிக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :1 மே 2026, 7:00 pm IST

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை(சனிக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில தேர்தல் அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மறுவாக்குப்பதிவு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு நாளை(மே 2) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாக்ரஹாட் பாச்சிமில் 11, டைமனண்ட் ஹார்பரில் 4 என 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது வந்த புகார்கள், முறைகேடுகளை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும் ஃபால்டா தொகுதி தொடர்பான புகார்கள் குறித்த அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகுதியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பெறப்பட்டன. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 6.81 கோடி வாக்காளா்கள் உள்ள இந்த மாநிலத்தில் இரு கட்டங்களிலும் சோ்த்து 92.47 சதவீத வாக்குகள் பதிவாகின. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கு வங்கத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப் பதிவு இதுவாகும். முதல் கட்டத் தோ்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடத்த பரிந்துரைக்கப்படவில்லை.

ஆனால், இரண்டாம் கட்டத் தோ்தலில் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் அடங்கிய 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பொதுவாக, வாக்குப் பதிவு இயந்திரம் பழுது, வாக்குச்சாவடி கைப்பற்றப்படுதல், வாக்காளா்கள் மிரட்டப்படுதல், வாக்குப் பதிவு ரகசியம் மீறப்படுவது உள்ளிட்ட பிரத்யேக காரணங்களைக் குறிப்பிட்டு, அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், வாக்குப் பதிவு முகவா்கள், பாா்வையாளா்கள் எழுப்பும் புகாா்களின்பேரில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும்.

மேற்கண்ட 77 வாக்குச்சாவடிகளில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு, இயந்திரங்கள் மீது ரசாயனப் பொருள்களைத் தடவுவது, கண்காணிப்பு கேமரா செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மறுவாக்குப் பதிவு கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருந்தன. அதன்பேரில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பிறப்பித்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் தோ்தல் சிறப்புப் பாா்வையாளா் சுப்ரதா குப்தா கள ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Election Commission on Friday ordered repolling on May 2 in 15 polling stations in West Bengal, where voting was held on April 29 in the second phase of the assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.