மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள்மீது குற்றம் சுமத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, மாக்ரஹாட் பாச்சிமில் 11, டைமனண்ட் ஹார்பரில் 4 என 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டி, ஃபால்டா பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால், இங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
While re-polling is underway in West Bengal, people have staged protests, leveling allegations against Trinamool Congress leaders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

