தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மேற்கு வங்கம்: காவல் துறை வாகனம் மீது முட்டை வீச்சு!

மேற்கு வங்க நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை வாகனம் மீது முட்டைகள் வீசப்பட்டது பற்றி...

News image

காவல் துறை வாகனம் மீது முட்டை வீச்சு. - படம் - பிடிஐ

Updated On :17 ஜூன் 2026, 6:47 pm IST

மேற்கு வங்க மாநிலம் சியால்டாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை வாகனம் மீது புதன்கிழமை (ஜூன் 17) முட்டைகள் வீசப்பட்டன.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற வன்முறையின் போது, கொல்கத்தாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் அவிஜித் சர்க்கார் கொலை செய்யப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அவிஜித் சர்க்காரின் வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல், அவரது வீட்டிலிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியது. அதன் பின்னர், அவரை இழுத்துச் சென்று அடித்துக் கொன்றது.

இந்த வழக்கு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வபன் சமத்தார், சியால்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்த பிறகு, அவர் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அந்த வாகனம் மீது முட்டைகளை வீசினர். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர் மக்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்வபன் சமத்தாரை வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Eggs were thrown at a police vehicle on the premises of the court in Sealdah, West Bengal, on Wednesday (June 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.