மேற்கு வங்க பள்ளிகளில் நாள்தோறும் காலையில் வந்தே மாதரம் பாடப்படுவதைக் கட்டாயமாக்க பள்ளிகளுக்கு அம்மாநிலத்தில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி நிறுவனத் தலைவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, “வரும் திங்கள்கிழமைமுதல் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடல் கடவுள் வாழ்த்தாக அறிமுகப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மே 13 ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பான காலை வணக்க வழிபாட்டின் போது, வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களும் உடனடியாக வந்தே மாதரம் பாடுவதை உறுதிசெய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் வந்தே மாதரம் பாடுவதைக் காணொளியாகப் பதிவு செய்து அதை ஆதாரமாக பள்ளிக்கல்வித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பங்ளார் மாட்டி பங்ளார் ஜொல் (வங்காள மண்ணே, வங்காள நீரே) என்னும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல் மமதா பானர்ஜி அரசால் அனைத்துப் பள்ளிகளிலும் காலை வழிபாட்டில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசு அமைந்ததும் ’வந்தே மாதரம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஜன கண மன’ என்னும் தேசிய கீதம் அனைத்து காலக்கட்டத்திலும் மாற்றமில்லாமல், தினசரி வழிபாட்டின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The West Bengal government has issued an order to schools making it mandatory to sing 'Vande Mataram' every morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக
விடியோக்கள்

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை


