உத்தரப் பிரதேசத்தின் ஜேவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல்கட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விமான நிலையத்தின் முதற்கட்டம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் சுமார் ரூ. 11,200 கோடி மொத்த முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின்படி,
தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான ஒரு முக்கிய சர்வதேச நுழைவாயிலாகக் கருதப்படும் இந்த விமான நிலையம், நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், பிராந்திய மற்றும் சர்வதேச இணைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியாகும்.
தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குத் துணையாக, நொய்டா சர்வதேச விமான நிலையம் தில்லி என்சிஆர் பிராந்தியத்திற்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விரு விமான நிலையங்களும் இணைந்து ஒருங்கிணைந்த விமானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்பட்டு, நெரிசலைக் குறைத்து, பயணிகளைக் கையாளும் திறன் விரிவடையும். மேலும், தில்லி என்சிஆரை உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும்.
நொய்டா சர்வதேச விமான நிலையம், சாலை, ரயில், மெட்ரோ மற்றும் பிராந்தியப் போக்குவரத்து அமைப்புகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்புடன் பலமுனை போக்குவரத்து மையமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பயணிகள் மற்றும் சரக்குகளுக்குத் திறமையாக இணைப்பை உறுதி செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Prime Minister Narendra Modi on Saturday inaugurated Phase I of the Noida International Airport in Jewar, Uttar Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று ஹைதராபாத் விமான நிலையத்துக்கு!

மதுரை சர்வதேச விமான நிலையம்! அரசாணை வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


