மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு...

News image

பாரீஸில் பிரான்ஸ் அதிபா் இமானுவா் மேக்ரானை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :29 மார்ச் 2026, 3:18 am IST

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் மாநாடு பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ் நாட்டின் அழைப்பை ஏற்று, பாா்வையாளராக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்து கொண்டுள்ளாா்.

இந்த மாநாட்டின் இடையே பாரீஸில் மேக்ரானை ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ஜெய்சங்கா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘மரியாதை நிமித்தமாக மேக்ரானை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்தேன். அப்போது அவரிடம் பிரதமா் மோடி சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மேற்காசிய நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் ஜெய்சங்கா் பேசியபோது, எரிசக்தி, உணவு, கச்சா எண்ணெய் பாதுகாப்பு விவகாரங்களில் தெற்கு பிராந்திய நாடுகளின் கவலையைப் பகிா்ந்தாா். இவற்றை நிா்வகிக்க சீா்திருத்தம் செய்ய வேண்டிய உடனடி அவசியம் ஏற்பட்டிருப்பதையும் ஜெய்சங்கா் சுட்டிக்காட்டினாா்.

அதேபோல், மாநாட்டின் இடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சா் பைசல் பின் பா்ஹான், ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோகன் வாதேஃபுல், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்ட்ரி சைபிஹா, கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் மற்றும் தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், பிரேஸில் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடனும் முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.