மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம்பீா் கோகுலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மோரீஷஸ் நாட்டில் 9-ஆவது இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மோரீஷஸ் நாட்டுக்கு ஜெய்சங்கா் சென்றுள்ளாா்.
அங்கு அவா், மோரீஷஸ் நாட்டு அதிபா் தரம்பீா் கோகுலை சந்தித்துப் பேசினாா். அப்போது அவரிடம், இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இந்தச் சந்திப்பையடுத்து, மோரீஷஸ் பிரதமா் நவீன் ராம்கூலம் மற்றும் மூத்த அமைச்சா்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். மேலும், மோரீஷஸின் முன்னாள் பிரதமரும், எம்எஸ்எம் கட்சியின் தலைவருமான பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மோரீஷஸ் நாட்டுக்கு வந்துள்ள நேபாளம், பூடான், செஷல்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களை தனித்தனியே ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்களுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தனது சமூகவலைதள பக்கத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டுள்ளாா்.
மோரீஷஸ் பயணத்தை சனிக்கிழமை முடித்துக் கொண்டு, அடுத்தகட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல ஜெய்சங்கா் திட்டமிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு - பாதுகாப்பு, மேற்காசிய விவகாரம் குறித்து ஆலோசனை

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

