பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு துரோகம் செய்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனுத் தாக்கல், தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் பணிகளை செய்துவருகின்றன.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறுகையில் "பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக மிகவும் தீவிரமாக உள்ளது.
பீகாருக்குப் பிறகு, மேற்கு வங்கத்தை 'ஜங்கிள் ராஜ்’ (காட்டாட்சி) ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக அங்கு தேர்தலில் வெற்றி பெறுவதே தனது நோக்கமாக இருக்கும் என்று மோடியே அறிவித்துள்ளார்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது? மத்தியப் பிரதேசம் மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது? பாஜக ஆட்சி எப்படி தவறான ஆட்சியாக மாறியுள்ளது? என்றெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வங்காள மக்கள் போதுமான பக்குவம் உடையவர்கள்.
மேலும், நாடு முழுவதும் பாஜக எப்படி மக்களுக்குத் துரோகம் செய்கிறது என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ” எனத் தெரிவித்தார்.
Summary
The National General Secretary of the Communist Party of India, D. Raja, has said that the Bharatiya Janata Party is betraying the people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது: சிபிஎம் எம்.ஏ. பேபி

தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

தமிழகத்துக்கு தொடா்ந்து துரோகம் செய்கிறது அதிமுக கூட்டணி! -கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


