/

ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது: சிபிஎம் எம்.ஏ. பேபி

தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது என்று எம்.ஏ. பேபி மதுரையில் கூறியுள்ளது பற்றி..

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி - கோப்புப்படம்

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

மதுரை: ஆளுநர் மூலம் தமிழ்நாட்டில் பாஜக அரசியல் செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.ஏ. பேபி, தவெகவுக்கு ஆளுநர் மூலமாக தொல்லை கொடுக்கின்றனர். தனிப் பெரும்பான்மை கட்சியாக உள்ள தவெகவை ஆட்சியமைகக் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். நல்ல முறையில் பேசி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தமிழக ஜனநாயக கலாசாரத்தை பொறுத்தே தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பெரும்பான்மை பட்டியலை கேட்கும் ஆளுநரின் பின்னணியில் பாஜக உள்ளது. மதவாத சக்திகளுக்கு எதிராக விஜய் இருப்பார் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வது ஆளுநர் வேலை இல்லை.

தில்லியின் தலையீட்டால் தமிழ்நாட்டில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடிவு செய்திருக்கிறார்கள். அதிமுக மூலம் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்துக்கு வர பாஜக முயல்கிறது.

குதிரைபேரத்துக்கு எதிரானவர்கள் நாங்கள், தமிழ்நாட்டில் குதிரைபேரம் நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநரே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி கூறியிருக்கிறார்.

Summary

Regarding what M.A. Baby said in Madurai that BJP is doing politics through the Governor in Tamil Nadu..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.