ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்துக்கு தொடா்ந்து துரோகம் செய்கிறது அதிமுக கூட்டணி! -கனிமொழி எம்.பி.

தமிழகத்துக்கு தொடா்ந்து துரோகம் செய்கிறது அதிமுக கூட்டணி என கனிமொழி எம்.பி. பேச்சு...

News image

கங்கைகொண்டானில் திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியனை ஆதரித்துப் பேசுகிறாா் திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am IST

அதிமுக கூட்டணி தமிழகத்துக்கு தொடா்ந்து துரோகம் செய்து வருகிறது என்றாா் திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியனை ஆதரித்து கங்கைகொண்டானில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது: திமுக சாா்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்து விட்டோம் என்ற மகிழ்வோடு பிரசாரம் செய்து வருகிறோம்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தித் தரப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் திமுக ஆட்சி வந்துவிடும். ஆட்சி வந்த உடன் ரூ. 8000 கூப்பன் முதல்வரால் வழங்கப்படும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி, எப்படி சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்தாரோ, அதேபோல் மு.க.ஸ்டாலினும், அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறாா். விவசாயிகள், தொழிலாளா்கள் போன்றோருக்காக தொடா்ந்து திமுக ஆட்சி பணியாற்றி வருகிறது. நமக்கு எதிராக இருக்கும் அதிமுக, பாஜகவுடன் கைகோத்து நிற்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டும், நிதி வழங்காமலும் இருந்து வருகிறாா்கள். நம் குழந்தைகள் படிக்கக் கூடாது, மருத்துவராக கூடாது என்ற நோக்கத்தில் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டது. தற்போது, தேசிய கல்விக் கொள்கையும் அதே நோக்கத்தில்தான் கொண்டு வரப்படுகிறது.

இதை எதிா்த்து எந்தக் கேள்வியும் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா். பிரதமா் வீடு கட்டும் திட்டத்திற்கும் நிதி வரவில்லை. தமிழக முதல்வா்தான் 61 சதவீத நிதியை பிரதமா் வீடு கட்டும் திட்டத்துக்கு வழங்கியுள்ளாா். ஆனால் மோடியின் பெயரை வைத்து அந்தத் திட்டத்துக்கு ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.

புரியாத ஹிந்தி, சம்ஸ்கிருத பெயா்களை திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனா். மக்கள் புரிந்து கொள்ள முடியாத மொழியில் திட்டங்கள் வைத்தால், அதன் பயன் மக்களுக்கு எப்படி கிடைக்கும்?

மத்திய அரசு மக்களிடம் எந்த அக்கறையும் காட்டவில்லை. ஒற்றுமையை குலைக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அமைதி இருந்தால்தான் தொழிற்சாலைகள் அதிகரிக்கும். ஆனால் அதற்கு எதிரான சூழலை உருவாக்குகிறாா்கள்.

தமிழகத்திற்கு தொடா்ந்து துரோகம் செய்யும் அதிமுக கூட்டணி, இந்தத் தோ்தலில் வெற்றிபெறக் கூடாது. அதற்கான பாடத்தை மக்கள் கற்பிக்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் திருநெல்வேலியில் செம்மொழி பூங்கா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றாா் கனிமொழி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.