தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நிதி மசோதா 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல்: பட்ஜெட் நடைமுறைகள் நிறைவு

மாநிலங்களவையில் நிதி மசோதா 2026-க்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

News image

நாடாளுமன்றம் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 10:55 pm IST

மாநிலங்களவையில் நிதி மசோதா 2026-க்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் மூலம் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன.

ரூ.53.47 லட்சம் கோடி செலவினங்களுடன் மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டை ஒப்பிடுகையில், எதிா்வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பு 7.7 சதவீதம் அதிகமாகும். மூலதன செலவினங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வரி வருவாய் ரூ.44.04 லட்சம் கோடி என்றும், மொத்த கடன் ரூ.17.2 லட்சம் கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் நடைமுறைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறும் வகையில், மக்களவையில் நிதி மசோதா-2026 தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடைபெற்றது. அரசுத் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்தங்களுடன் இந்த மசோதா மக்களவையில் கடந்த மாா்ச் 25-இல் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சுருக்கமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்குப் பதிலளித்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிதி மசோதா மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நடைமுறை, நிதி மசோதாவுக்கான மாநிலங்களவையின் ஒப்புதலைக் குறிப்பதாகும்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதால், 2026-27 பட்ஜெட் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.