கொல்கத்தாவில் பெய்த கனமழை மற்றும் வீசிய சூறாவளிக் காற்றால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் பச்சிம் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், தனி விமானம் மூலம் கொல்கத்தாவுக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழை மற்றும் அங்கு வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 20 நிமிடங்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் முடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4 மணிக்குத் தரையிறங்க வேண்டிய முதல்வர் மமதாவின் விமானம் வானில் வட்டமடித்தபடி பறந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், வானிலை சீரான பிறகு மாலை 5.19 மணியளவில் முதல்வர் மமதாவின் தனி விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் மமதாவின் வருகைக்காகத் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
Summary
West Bengal CM Mamata Banerjee's flight was delayed in landing due to heavy rain and cyclone winds in Kolkata.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


