/

மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல்!

மேற்கு வங்க அரசு திரிணமூல் காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்

News image

மத்திய அமைச்சர் அமித் ஷா - ANI

Updated On :26 மார்ச் 2026, 1:01 pm IST

மேற்கு வங்க அரசு திரிணமூல் காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து வரும் சனிக்கிழமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக மாநில பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், மார்ச் 28 ஆம் தேதியில் வருகைதரும் அமித் ஷா, செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். மேலும், திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை விவரிப்பதோடு, அக்கட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையையும் முறைப்படி அமித் ஷா தாக்கல் செய்யவிருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக, திரிணமூல் காங்கிரஸ் அரசின்கீழ் நடைபெற்ற ஊழல், நிர்வாகத் தோல்விகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள ஆகியவற்றை இந்தக் குற்றப்பத்திரிகை விரிவாக விவரிக்கும்.

மேலும், 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸின் முறையற்ற ஆட்சி மற்றும் ஊழலை விவரிக்கும் ஒரு விரிவான வெள்ளை அறிக்கையையும் பாஜக வெளியிடுகிறது என்று பாஜகவினர் கூறினர்.

Summary

Amit Shah to visit West Bengal on March 28; BJP to launch chargesheet against Trinamool Congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.