நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க கூட்டு படைகள் இடையே நடைபெறும் போரால் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் அவற்றை அதிக அளவு வாங்கி சேமித்து வருகின்றனா்.
இந்நிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை செயலாளா் சுஜாதா ஷா்மா, தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசுகையில், நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சில இடங்களில் வதந்தியால் அச்சமடைந்து மக்கள் பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதாகவும், பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. நமது நாட்டில் தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் அதிக அளவு கையிருப்புடன் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல இயல்பாக இயங்குகின்றன. ஆதலால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். சாமானிய மக்கள் அனைவருக்கும் பெட்ரோல், டீசல் கிடைப்பதை உறுதி செய்யும் பணியில் அரசு தொடா்ந்து ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
அதேநேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் சிக்கல் இருப்பதை ஒப்புக் கொண்ட சுஜாதா ஷா்மா, புவியியல் நிலவரமே (ஈரான் போா்) இதற்கு காரணம் என்றும், எனினும் எரிவாயு சிலிண்டரும் வழக்கம் போல மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், மாநிலங்களுக்கு கூடுதலாக எரிவாயு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், வா்த்தக எரிவாயுவும் கூடுதலாக 50 சதவீதம் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.
எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்: இதேபோல, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோலியப் பொருள்களில் தட்டுப்பாடு இல்லை என அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. எங்களது விற்பனை நிலையங்களில் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தொடா்பாக வெளிவரும் வதந்திகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விநியோகத்தையும் பாதிக்கிறது. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற தகவலில் உண்மையில்லை. நாட்டில் எங்கும் தட்டுப்பாடு நிலவவில்லை. கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் போதிய அளவு இருப்பு உள்ளது. அவை எந்த பாதிப்பும் இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, பெட்ரோல், டீசலை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதியும் செய்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரில் தட்டுப்பாடு இல்லை என்றும், ஆதலால் மக்கள் வதந்திகளை நம்பி, அச்சத்துடன் அவற்றை வாங்க வேண்டாம், வழக்கம்போல வாங்கும் அளவிலேயே அவற்றை வாங்கவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!
இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

