கோவாவில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள், பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு இல்லை என அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் எல்பிஜி, பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை எல்பிஜி, பெட்ரோல் விநியோகிப்பதில் இதுவரை எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கோவாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து கடலோர மாநிலம் முழுவதும் நேற்று இரவு பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த்,
மாநிலத்தில் பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இப்போதைக்கு இல்லை. கேன்களில் பெட்ரோல் நிரப்பி வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவசியமில்லை. மாநிலத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் அடுத்த 15 நாள்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது. அதேபோன்று எல்பிஜி சிலிண்டர்களுக்கும் பற்றாக்குறை இல்லை. மக்கள் கூடுதலாக சிலிண்டர்களை வாங்கத் தேவையில்லை.
வணிக சிலிண்டர்களின் விநியோகம் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள. உணவகங்கள் பிஎன்ஜி இணைப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக 20 சதவீத சிலிண்டர்கள் வழங்க வழிவகைச் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜிக்கு பற்றாக்குறை இல்லை என அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், பீதியுடன் பொருள்களை வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என மக்களை அவர் வலியுறுத்தினார்.
Summary
Goa Chief Minister Pramod Sawant on Wednesday said that there is no shortage of domestic LPG cylinders or petroleum products in the state, urging people not to resort to panic buying.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 8-வது இந்திய கப்பல்!

எல்பிஜி தட்டுப்பாடு இல்லை, பீதி வேண்டாம்: முதல்வா் குப்தா
இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசு

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


