ஏப். 1 முதல் விமான கட்டணம் உயரலாம் என்பதைப் பற்றி மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு சூசகமாக இன்று(மார்ச் 21) தெரிவித்தார்.
சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ஆம் தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இன்று(மார்ச் 21) செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ஏடிஎஃப் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் நாள் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, அதன் தாக்கம் ஏப். 1 முதல் தெரிய வரும். ஆனால், நாங்கள்(அரசு) தொடர்ந்து விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடன் தொடர்பிலிருந்து வருகிறோம்.
அதில், முதலில் வருவதும் முக்கியமானதும் ஒன்றே, பாதுகாப்பான பயணம் வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதிலும் குறிப்பாக, மத்திய கிழக்கில்.
விமான நிறுவனங்களிலும் அதன் செயல்பாடுகளிலும் ஏடிஎஃப் விலை உயர்வால் தாக்கம்; பொருளாதார தாக்கம் ஏற்படக்கூடும். விமான நிறுவனங்களிடமிருந்தும் கருத்துகேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, ஆலோசனைகளையும் நடத்தி வருகிறோம்.
இதுவொரு பல்துறைசார் நடவடிக்கையாக அமைந்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயன்று வருகிறோம்.
நிச்சயமாக, எண்ணெய் மற்றும் ஏடிஎஃப் விலையில் தாக்கம் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் பயணிகளுக்கு கடத்தப்படாதிருக்கவும் வேண்டும். அதுவே அமைச்சகத்தின் நோக்கமாகும்” என்றார்.
Summary
ATF prices are decided on the first of every month - Minister of Civil Aviation, Ram Mohan Naidu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

