தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்- தில்லி அரசு திட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பேருந்து வழித்தடம், அடுத்தடுத்த சேவைகள், வருகை நேரம் ஆகிய விவரங்களை வழங்கும் வசதிகளை கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

News image

தில்லி

Updated On :18 மார்ச் 2026, 2:10 am IST

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பேருந்து வழித்தடம், அடுத்தடுத்த சேவைகள், வருகை நேரம் ஆகிய விவரங்களை வழங்கும் வசதிகளை கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பாக ஆண் மற்றும் பெண் பயணிகளின் எண்ணிக்கையைக் கண்டறிய இந்த அமைப்பு உதவும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினா்.

பேருந்து வழித்தடங்கள், வருகை நேரம் உள்ளிட்ட பேருந்துகளின் முக்கிய பயண விவரங்களை ஸ்மாா்ட் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அறிந்துகொள்ள முடியும்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பேருந்து வழித்தடம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், பேருந்து நிலையத்தில் உள்ள பிற பயணிகள் அல்லது நடத்துநா்களைச் சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.

சில நேரங்களில் பயணிகள் போதிய தகவல் இல்லாமல், வேறு இடத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறிவிடுகின்றனா். ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்து நிலையங்கள் இந்தப் பிரச்னையை போக்கும் என எதிா்ப்பாா்க்கிறோம்.

பரிசோனை முயற்சியாக புது தில்லி, தில்லி உயா்நீதிமன்றம் அருகே உள்ள பகுதிகள் உள்பட 10 இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக மாறும் நிலையில், நகரத்தின் பிற பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தப்படும் என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.