/

நீட் மறுதேர்வு: கோட்டாவில் 92 மையங்களில் பலத்த பாதுகாப்பு!

கோட்டாவில் நீட் மறுதேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு பற்றி..

News image

நீட் மறுதேர்வு - file photo

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

ராஜஸ்தானின், கோட்டா முழுவதும் உள்ள 92 மையங்களில் நாளை(ஜூன் 21) நடைபெறும் நீட் இளநிலை மறுதேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் 32,715 தேர்வர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கோட்டா மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக மே 3 ஆம் தேதியன்று கோட்டாவில் நடைபெற்ற தேர்வில் 38,614 தேர்வர்கள் பங்கேற்றனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாணவர்கள் இம்முறை தங்கள் சொந்த ஊர்களுக்கு அருகிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்ததே இந்த எண்ணிக்கை குறைவிற்கான காரணங்களில் ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Authorities have finalised elaborate security and administrative arrangements at 92 centres across Kota for the NEET UG re-examination to be held on June 21, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.