புது தில்லி: 'நடைபாதைகளில் சுதந்திரமாக நடந்து செல்வது அடிப்படை உரிமை' என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்; 'வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
பல மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், வாக்களிக்கும் உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
தெளிவாக வரையறுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படும் நடைபாதைகளில் நடந்து செல்வது அடிப்படை உரிமையாகும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள தீா்ப்பை வரவேற்றுள்ள அவர், வாக்களிக்கும் உரிமை குறித்தும் நீதிமன்றம் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும்.
தெளிவாக வரையறுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படும் நடைபாதைகளில் நடந்து செல்வது அடிப்படை உரிமையாகும். நடைபாதைகளில் நடந்து செல்லும் அடிப்படை உரிமையை மேம்படுத்தவும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஓா் ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவது அவசியம் என்று என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதேபோன்று இப்போது வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன? இந்திய ஜனநாயகத்தை அதன் "தற்போதைய அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்ற இது மிக முக்கியமானது," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். இது ஒரு சட்டப்பூர்வ உரிமை, ஆனால் அடிப்படை உரிமை அல்ல. அடிப்படை உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்ட முடியும் (நீதிக்கு உள்பட்டவை) என்று அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம், வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு சட்டப்பூர்வமான உரிமை மட்டுமே, அது அடிப்படை உரிமை அல்ல என்று பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Jairam Ramesh suggested that the court should also make similar declaration in regard to the right to vote.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடைபாதைகளில் சுதந்திரமாக நடந்து செல்வது அடிப்படை உரிமை: உச்சநீதிமன்றம்

திரிணமூல் எம்.பி.க்கள் விலகியதின் பின்னணியில் அமித் ஷா: காங்கிரஸ்

நேருவின் சாதனைகளை மறைக்க முயற்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

