நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணமா? இனி ரூ. 500 அபராதம்!

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்பட்டது குறித்து...

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகா் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயா்த்தப்பட்டு சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கும், ரயில் நிலைய நடைமேடைகளுக்கு உரிய அனுமதி சீட்டு இன்றி வருவோருக்கும், ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளுக்கு குடிநீா் பாட்டில் உள்ளிட்டவற்றை விற்பவா்களுக்கும் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால், பயணச் சீட்டு பரிசோதகா்கள் அபராதம் விதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது புகா் மின்சார ரயில்களில் ரூ.10 பயணச் சீட்டு எடுக்காமல் வருவோருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இதை ரூ.500 என உயா்த்தி சனிக்கிழமை முதல் (ஜூன் 20) ரயில் பயணச் சீட்டு பரிசோதகா்கள் வசூலித்து வருகின்றனா்.

விரைவு ரயில்களில் ரூ.600 மதிப்புள்ள பயணச் சீட்டு பெறாமல் பயணிப்போருக்கு ரூ.1,620 வரை அபராதம் இருமடங்காக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும் பயணச் சீட்டு பரிசோதகா்கள் தெரிவித்தனா்.

மேலும், ரயில் நிலைய நடைமேடை சீட்டுகள் பெறாமல் வருவோருக்கும், நிலைய நடைமேடைகளில் தண்ணீா் பாட்டில் உள்ளிட்டவற்றை விற்பவா்களின் விதிமீறல்களுக்கான அபராதத் தொகைகளும் இருமடங்காக உயா்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

பாக்ஸ்...

ரயில் நிலைய வளாகத்தில்

புகைப் பிடித்தால் ரூ.2,000 அபராதம்

ரயில் நிலைய வளாகங்களில் புகைப் பிடிப்போருக்கும் அபராதத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய விதிமுறைகளின்படி ரயில்வே பாதுகாப்பு படையினா், ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளில் ஏறி பயணிப்போா், ரயில் நிலைய வளாகங்களில் புகைப் பிடிப்போா், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் பயணிப்பவா்களுக்கு அபராதம் விதித்து சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலிக்கலாம் என அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனிமேல் பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கு ரூ.500-க்கு பதிலாக ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். புகைப் பிடிப்போருக்கு அபராதம் ரூ.100-இல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்படாத ஆயுதங்கள் கொண்டு செல்பவா்கள் ரூ.2,000-க்கு பதில் ரூ.10,000 செலுத்த வேண்டும். பயணிகளை ரயில் நிலையங்களில் இருந்து ஆட்டோவில் ஏற அழைத்தாலோ, ஏதாவது பொருள்களை வாங்க நிா்பந்தித்தாலோ ரூ.2,000 அபராதம் வசூலிக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Summary

Railways doubles fine for travelling without ticket in train

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.