/

ராகுல் காந்தி வெறும் 'ரீல்' ரியல் அரசியல்வாதி அல்ல: பாஜக குற்றச்சாட்டு!

காங்கிரஸில் ராகுலுக்கான ஆதரவு குறைந்து வருவதாக பாஜக குற்றச்சாட்டு பற்றி..

News image

ஹெஹ்சாத் பூனவாலா - file photo

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குத் தனது சொந்தக் கட்சியிலேயே ஆதரவு குறைந்து வருவதாக பாஜக விமர்சித்ததுள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஹெஹ்சாத் பூனவாலா வெளியிட்ட காணொலியில்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் மாலுமிகள் விவகாரம் குறித்து மோடி கையாண்ட விதம் குறித்து தரூர் தெரிவித்த கருத்துகள், ராகுல் காந்தியின் நிலைப்பாட்டிற்கு முரணாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அதே விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாட்டிற்கு முரணாக டாக்டர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். மாலுமிகள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி மிக வலுவாகவும் திறம்படவும் எடுத்துரைத்தார் என்று அவர் கூறியுள்ளார் என பூனவாலா காணொலி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மோடியின் தலைமைத்துவப் பண்புகள், தொலைநோக்குப் பார்வை, கருத்துகளை வெளிப்படுத்தும் விதம், துடிப்பு மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை சசி தரூர் பாராட்டியுள்ளார். இந்தியர்களின் வாழ்வில் மோடி ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார், என்று அவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியை வருங்காலப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையையும் விமர்சித்த அவர், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒருபுறம் காங்கிரஸ் கூல் பிரதமர் ராகுல் என்று கூறி, ராகுல் நாட்டின் பிரதமராவார் என்று உரிமை கோருகிறது. ஆனால், அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்களே அதை நம்புவதாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு மட்டுமின்றி, ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாகக் கருதப்பட்டவர்களின் ஆதரவும் குறைந்துவிட்டதாகக் கூறிய அவர், 99 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்ததன் மூலம் ராகுல் காந்தி மக்கள் ஆதரவை இழந்துவிட்டார் என்பதை இது காட்டுகிறது.

ராமச்சந்திர குஹா அல்லது சசி தரூர் என ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் ஆதரவையும் அவர் இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் சில கூட்டணிக் கட்சிகள் கூட ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

தற்போது, ​​அவருக்குத் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இல்லை. இடதுசாரிகளோ அல்லது திமுகவோ யாராக இருந்தாலும், அவர்கள் அவரது தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.

ராகுல் காந்தி வெறும் 'ரீல்' அரசியல்வாதியாகவே சுருங்கிவிட்டார் அவர் ஒரு 'ரியல்' அரசியல்வாதி அல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.

The BJP on Saturday claimed that Congress leader Rahul Gandhi is losing support within his own party and cited Congress MP Shashi Tharoor's purported remarks praising Prime Minister Narendra Modi to attack the opposition leader.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.