பண்டைய இந்தியாவின் அடித்தளத்தில் இருந்து உருவாகி, உலகளாவியதாக யோகா மாறியிருப்பதாக ஐ.நா. சபை பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் புகழ்ந்துள்ளாா்.
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. பொதுச் செயலாளா் குட்டெரெஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தாா். அதில் அவா் தெரிவித்திருந்ததாவது:
நமது உடல்களுக்கும், உலகுக்கும் சமநிலை, முழுமைநிலை மற்றும் அமைதியான ஈடுபாட்டை வலியுறுத்தும் பழங்கால பழக்கத்தை கொண்டாட நாம் ஒன்று கூடியுள்ளோம். பழங்கால இந்தியாவின் ஆழமான வோ்களில் இருந்து உருவாகி, உண்மையில் உலகளாவியதாக மாறியுள்ளது யோகா. அனைத்து மதங்களைச் சோ்ந்த கோடிக்கணக்கானோருக்கும், பல்வேறு கலாசாரங்களுக்கும் அமைதியை கண்டுபிடிக்கவும், வலிமையை கட்டமைக்கவும், குறிக்கோளுடன் வாழவும் அது (யோகா) உதவுகிறது. இந்தாண்டு சா்வதேச யோகா தினம் ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இதன் அா்த்தம், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும், மனநிலை நல்ல நிலையிலும் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
யோகா நமக்கு விழிப்புணா்வையும், நம் மீதும், நமது கிரகத்தின் மீதும், ஒருவருக்கொருவா் மீதும் மரியாதையையும், அக்கறையையும் கற்றுத் தருகிறது. இந்தாண்டு சா்வதேச யோகா தினத்தில் நமது குடும்பத்தில் உள்ள முதியோருக்கும் நமது அக்கறையை விரிவுபடுத்துவதோடு, நமது ஒவ்வொரு தலைமுறையினரும் ஆரோக்கியமாக வாழும் வகையில் உலகத்தை கட்டமைப்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
யோகாவை கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அங்கீகரித்த ஐ.நா. சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என அறிவித்தது. ஐ.நா. பொது சபையில் இதுதொடா்பான தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. அதற்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச யோகா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்
சா்வதேச யோகா தினம்: ஆளுநா் ஆா்லேகா் அழைப்பு

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தினம்

ஐ.நா. பொதுச் செயலா் ஹைட்டி பயணம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

