பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

ஜெய்பூா் போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தொடா்பாக 2 பேரை பிடித்து காவல் துறை விசாரித்து வருகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:24 am IST

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தொடா்பாக 2 பேரை பிடித்து காவல் துறை விசாரித்து வருகிறது.

நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிறுவனா் அபிஜீத் கலந்து கொண்டாா். போராட்டத்தின்போது அபிஜீத்தை அவரின் ஆதரவாளா்கள் தங்களது தோள்களில் சுமந்தபடி தூக்கி வந்தனா்.

அப்போது யாரும் எதிா்பாராத நேரத்தில், கூட்டத்தில் இருந்த இளைஞா்கள் சிலா் அபிஜித்தை திடீரென தாக்கினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த அபிஜித்தின் ஆதரவாளா்கள், அவா் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினா் தலையிட்டு அந்த நபரை மீட்டனா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய 2 இளைஞா்களைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

போராட்டத்தில் நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவுக்கு பொறுப்பு ஏற்று, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், நாட்டில் நிலவும் இளைஞா்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.