பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி! ஏன்?

மேற்கு வங்கத்தில் பிரசாரத்தின்போது கடைக்காரரிடம் பிரதமர் மோடி மசாலா பொரி வாங்கினார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் மசாலா பொரியை மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் வழங்கியது குறித்து...

News image

பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி - ஏஎன்ஐ

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மசாலா பொரியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் விதமாக தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.

தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மருத்துவத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சஞ்சய் ஜா, சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சிராக் பஸ்வான், ஜனசக்தி கட்சியின் தலைவர் பவன் கல்யாண், ஜித்தன் ராம் மாஞ்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் இடைவேளையில் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் மசாலா பொரியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அளித்தார்.

மேற்கு வங்கத்தில் பிரசாரத்தின்போது கடைக்காரர் ஒருவரிடம் மசாலா பொரியை பிரதமர் மோடி வாங்கினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. கடைக்காரரிடம் மசாலா பொரி வாங்கும் பிரதமர் அதை உண்ணமாட்டார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மசாலா பொரி மட்டும் அல்ல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவாக உள்ள மீன் உள்ளிட்ட இறைச்சியை உண்ண முடியாது என மமதா பானர்ஜி பிரசாரம் செய்தார். மசாலா பொரியை வைத்து பாஜக பிரசாரத்தை தீவிரப்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அதனைக் குறிப்பிடும் வகையில் மசாலா பொரியை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் வழங்கியதாகத் தெரிகிறது. பிரதமர் மோடிக்கு அவரே மசாலா பொரியை நிரப்பிக் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

West Bengal CM Suvendu Adhikari serves Jhalmuri to PM Modi and other NDA leaders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.