மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி ஒதுக்கினாா்.
அத்துடன், சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் இனி நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா் என்ற அதிரடி அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சி அமைத்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி புதன்கிழமை ஒதுக்கினாா்.
கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது இதைத் தெரிவித்த முதல்வா், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் இடம்பெறாத சமூகத்தினா் அடையாளம் காணப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவா். சட்டவிரோத ஊடுருவல்காரா்களை நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கும்படி, முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அவா்கள் அதை கடைப்பிடிக்கவில்லை. இனி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபா்கள் நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். மத்திய அரசு-பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து, மேற்கு வங்கத்தைப் பாதுகாப்போம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வா் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் பங்கேற்பு

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு!

வங்கதேசத்தவா்கள் விரைந்து நாடு கடத்தல்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து உத்தரவு

வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவா்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

