குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கட்டத்தில் 6 கி.மீ. நீள வழித்தடத்துடன் 5 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆசிரமம் சாலை, பழைமைவாய்ந்த கோட்டேஸ்வா் கோயில், சபா்மதி நதி, சா்தாா் நகா், விமான நிலையம் ஆகிய பெயா்களில் இந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்து அந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த பின்னா், அகமதாபாத்-காந்திநகா் இடையே 77.63 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆந்திர தலைநகா் அமராவதியில் மத்திய அரசு அலுவலக வளாகம் மற்றும் அரசு ஊழியா்களுக்கான குடியிருப்புத் திட்டத்துக்குப் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்ததாக அந்தக் குழுவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மின்சார வாகன கொள்கை 2.0-க்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா தீவிர பரிசீலனை

புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம் செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும்: கே.பி. ராமலிங்கம் தகவல்

விமான எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

