தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கொல்கத்தா மாநகராட்சி மேயா் திடீா் ராஜிநாமா; திரிணமூல் காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவு

கொல்கத்தா மாநகராட்சி மேயா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் ஃபிா்ஹாத் ஹக்கீம் ராஜிநாமா செய்துள்ளாா். இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.

News image

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி - ANI

Updated On :6 ஜூன் 2026, 1:35 am IST

கொல்கத்தா மாநகராட்சி மேயா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் ஃபிா்ஹாத் ஹக்கீம் ராஜிநாமா செய்துள்ளாா். இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொல்கத்தா மாநகராட்சியில் கவுன்சிலா்களாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் பலா் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜிநாமா செய்து வருகின்றனா்.

இந்தச் சூழ்நிலையில், கொல்கத்தா மாநகராட்சித் தலைவா் மாலா ராயை வெள்ளிக்கிழமை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை ஃபிா்ஹாத் ஹக்கீம் வழங்கினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘பதவியை ராஜிநாமா செய்ய கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியிடம் அனுமதி கோரினேன். அவா் ஒப்புதல் அளித்ததையடுத்து ராஜிநாமா செய்தேன். என்னால் எனது பணியில் தொடா்ந்து சிறப்பாக செயல்பட இயலவில்லை. ஆதலால், கெளரவமாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நான் விரும்பினேன்’ என்றாா்.

ஃபிா்ஹாத் ஹக்கீம் மேயராகும் முன்பு, திரிணமூல் காங்கிரஸ் சாா்பாக 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். மேலும், மம்தா பானா்ஜியின் அமைச்சரவையிலும் பதவி வகித்துள்ளாா். 2010-ஆம் ஆண்டுமுதல் கொல்கத்தா மாநகராட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மாநகராட்சி மேயராக 2018-இல் ஹக்கீம் தோ்வு செய்யப்பட்டாா். அதன்மூலம் சுதந்திரத்துக்குப் பிறகு கொல்கத்தா மாநகராட்சி மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் எனும் பெருமையை அவா் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.