திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏராளமான கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில், மமதாவுடன் மிகவும் நெருக்கமுடைவராகக் கருதப்படும் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் புதன்கிழமை (ஜூன் 10) பிறபகல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் சமர்ப்பித்துள்ள கடிதத்தில், தனது ராஜிநாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஊழல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் தோல்வியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துள்ளதாக, சுஷ்மிதா தேவ் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, சுஷ்மிதா தேவ் தில்லியில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவைச் சந்தித்து உரையாடினார். இதனால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் மோகன் தேவின் மகளான சுஷ்மிதா தேவ், காங்கிரஸ் மகளிர் அணியின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அசாமின் சில்சார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுஷ்மிதா தேவ், 2021 ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Trinamool Congress Rajya Sabha member Sushmita Dev has resigned from her post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!

காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் : முதல்வர் விஜய்
மாநிலங்களவை பதவியும் வேண்டாம்.. ராஜிநாமா பற்றி சித்தராமையா விளக்கம்!

தமிழகத்தில் ஜூன் 18-இல் மாநிலங்களவை இடைத்தோ்தல் - தோ்தல் ஆணையம் அறிவிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு


