பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பஞ்சாப் காங்கிரஸில் தலைமை மாற்றம் இல்லை: பூபேஷ் பாகேல்

காங்கிரஸில் தலைமை மாற்றத்தை மேற்கொள்ளவது பற்றி..

News image

பூபேஷ் பாகல் - file photo

Updated On :2 ஜூன் 2026, 5:23 pm IST

பஞ்சாப் மாநில காங்கிரஸில் தலைமை மாற்றத்தை மேற்கொள்ளக் கட்சி பரிசீலித்து வருவதாக எழுந்த ஊகங்களை, அம்மாநில பொறுப்பாளரான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பூபேஷ் பாகேல் நிராகரித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லமான 10, ராஜாஜி மார்க்கில், கட்சியின் உயர்நிலை தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பூபேஷ் பாகேல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கார்கேவுடன், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், பஞ்சாப் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதேபோன்று இன்றும் கூட்டம் நடத்தப்பட்டது.

கட்சியின் எதிர்காலச் செயல்பாடு குறித்துத் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் தலைமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக எழுந்த ஊகங்கள் குறித்துக் கேட்டபோது,

சில நாள்களுக்கு முன்பே நான் கூறியிருந்தேன், அதுகுறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இயல்புடையது.

நாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டே முன்னோக்கிச் செல்வோம். இவை ஊடகங்களில் பரவும் வெறும் ஊகங்கள் மட்டுமே. தலைமை மாற்றம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Summary

Congress general secretary in-charge for Punjab Bhupesh Baghel rejected speculation on Tuesday that the party is mulling a change of leadership in the state and asserted that next year's Assembly polls would be contested by leaders collectively.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.