லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாடு முழுவதும் போராட்டத் தீ! அடிக்க வந்த காவலர்கள்.. தேசிய கீதம் பாடிய ஜென்ஸி! டிரெண்டாகும் விடியோக்கள்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவி வரும் நிலையில், தங்களை அடிக்க வந்த காவலர்களைத் தடுக்க தேசிய கீதம் பாடிய ஜென்ஸி போராட்டக்காரர்கள்.

Sixteen metro stations shut amid security buildup for Jantar Mantar protest; interchange facilities remain open

ஜந்தர் மந்தர் போராட்டம் - ஏஎன்ஐ

Published On :23 ஜூலை 2026, 1:37 pm IST

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மும்பை, பாட்னா உள்ளிட்ட எண்ணற்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின்போது நடந்த பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் பற்றிய விடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தில்லி மற்றும் மும்பையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையிலும், மழையில் நனைந்தபடி இளைஞர்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள். தில்லியில் ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.

தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மும்பையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, அதனை ஒரே ஒரு பெண் தன்னந்தனியாக தடுத்து நிறுத்தியிருக்கிறார். வாகனத்தை முன்னோக்கிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், அதிலிருந்த மாணவர்களும், இளைஞர்களும் வெளியே இறக்கிவிடப்பட்டனர். இந்த விடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதுபோல, மும்பையில் மற்றொரு விடியோவும் வைரலாகி வருகிறது. பட்டாம்பூச்சிகளாக பறக்க வேண்டிய இளைஞர்கள், தங்களது எதிர்காலத்தை நசுக்கும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, நடுவழியில் வாகனத்தின் பின்பக்க தாழ்பாளை ஒரு இளைஞர் திறந்துவிட, அதற்குள் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் வெளியே வரும் விடியோவும் இணையவாசிகளால் உணர்வுப்பூர்வமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுபோல, மற்றொரு போராட்டத்தில், மாணவர்களை கைது செய்ய காவல்துறையினர் நெருங்கியபோது, ஜென்ஸி இளைஞர்கள் ஒரு நிமிடத்தில் யோசித்து அவர்களைத் தடுக்க ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம் பாடத் தொடங்கிவிட்டார்கள்.

தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க வேண்டும், இல்லையென்றால் கைது செய்து வாகனத்தில் ஏற்ற வேண்டும். இரண்டுமே செய்ய முடியாமல் போராட்டக்காரர்களுடன் காவல்துறையும் ஒன்றாக நின்றுகொண்டு தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளித்தனர்.

இதனை அங்கிருந்த இளைஞர்கள் விடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Summary

As the flames of protest spread across the country, protesters sang the National Anthem to deter the police who were advancing to strike them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.