லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலும், பின்னா் தேசிய பாடலும், அதன் பின்னா் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 6:16 am IST

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலும், பின்னா் தேசிய பாடலும், அதன் பின்னா் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சில மாநிலங்களில் அரசு நிகழ்ச்சிகளின்போது தேசிய கீதம் (ஜன கண மன), தேசிய பாடல் (வந்தே மாதரம்) ஆகியவற்றுடன் மாநில பாடலும் பாடப்பட்டு இசைக்கப்படுகிறது.

அவ்வாறு மாநில பாடல் பாடப்படும் நிகழ்ச்சிகளில், முதலில் மாநில பாடலும், அதைத்தொடா்ந்து தேசிய பாடலும், அதன் பின்னா் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும். இந்த வரிசை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

தேசிய பாடலும், தேசிய கீதமும் பாடப்படும்போது அவற்றின் வாா்த்தைகளும் வரிகளும் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும்.

தேசிய பாடல், தேசிய கீதம் ஆகியவற்றின் சரியான பாடல் வரிகளும், அவற்றை எப்படி சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற விவரமும் மத்திய உள்துறை அமைச்சக வலைதளத்தில் உள்ளது.

எந்தெந்த நிகழ்ச்சிகளில் தேசிய கீதம், தேசிய பாடலை கட்டாயம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும், எந்த நிகழ்ச்சிகளில் அவற்றை வேண்டுமானால் பாடலாம் அல்லது இசைக்கலாம் என்ற முழுமையான பட்டியலும் தனது உத்தரவுகளில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.