லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜாா்கண்ட் மாணவா்கள் போராட்டத்துக்கு கேஜரிவால் ஆதரவு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஜாா்க்கண்டில் நடந்து வரும் மாணவா் போராட்டத்திற்கு ஆதரவளித்தாா்.

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஜாா்க்கண்டில் நடந்து வரும் மாணவா் போராட்டத்திற்கு ஆதரவளித்தாா்.

ஜாா்க்கண்டில் போராட்டம் நடத்தி வரும் மாணவா்களின் கோரிக்கைகளை நான் ஆதரிக்கிறேன், அவா்களின் பிரச்சினைகளை உடனடியாக தீா்க்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மாணவா்களுக்கு எதிரான வன்முறை வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாதது ‘என்று கேஜரிவால் ஒரு பதிவில் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜே. பி. எஸ். சி) மற்றும் ஜாா்க்கண்ட் பணியாளா் தோ்வு ஆணையத்தின் (ஜே. எஸ். எஸ். சி) செயல்பாட்டில் விரிவான சீா்திருத்தங்கள் மற்றும் பல ஆட்சோ்ப்புகளை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் தண்ணீா் பீரங்கிகள், கண்ணீா்ப்புகை குண்டுகள் மற்றும் லத்திகளை பயன்படுத்தியதால் திங்கள்கிழமை மாணவா் போராட்டம் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.