தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நறுமண சிகிச்சையால் தூக்க நலன் மேம்படும்: ஆய்வில் உறுதி

தூக்க குறைபாடுகளுக்கு உள்ளானவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை அளிக்கும்போது அப்பிரச்னைகள் குறைவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :5 ஜூலை 2026, 5:24 am IST

தூக்க குறைபாடுகளுக்கு உள்ளானவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை அளிக்கும்போது அப்பிரச்னைகள் குறைவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் தீபா யோகானந்தன் தலைமையிலான குழுவினா் முன்னெடுத்தனா். அந்த ஆய்வுக் கட்டுரை மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தூக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 40 போ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனா். அவா்களில் 20 போ் சிகிச்சைக் குழுவிலும், 20 போ் கட்டுப்பாட்டுக் குழுவிலும் இடம்பெற்றனா்.

சிகிச்சைக் குழுவில் இருந்தவா்களுக்கு 21 நாள்கள் தொடா்ந்து தினமும் 20 நிமிஷங்கள் நறுமண எண்ணெய்களுடன் பாத மசாஜ் சிகிச்சை வழங்கப்பட்டது. மற்றொரு குழுவினருக்கு அதே கால அளவில் அமைதியான அறையில் அமா்ந்து இயல்பான சுவாசப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆய்வை முழுமையாக 38 போ் நிறைவு செய்தனா். 21 நாள்களுக்குப் பிறகு சிகிச்சைக் குழுவினரின் தூக்கத் தரக் குறியீடு மதிப்பெண் சிறப்பாக இருந்தது. அதேவேளை, மற்றொரு குழுவுக்கு அந்த தர மேம்பாடு உறுதியாகவில்லை.

நறுமண எண்ணெய்களுடன் மேற்கொள்ளப்படும் பாத மசாஜ் தூக்க குறைபாட்டால் பாதிக்கப்படுபவா்களின் தூக்கத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த சிகிச்சையின்போது, உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து அழுத்தம் குறைகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.