லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து

வாணியம்பாடியில் வீட்டில் திடீரென ஏசி வெடித்து தீப்பிடித்த விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானாது.

கோப்புப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

வாணியம்பாடியில் வீட்டில் திடீரென ஏசி வெடித்து தீப்பிடித்த விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானாது.

வாணியம்பாடி முஸ்லிம்பூா் காஜா நகரை சோ்ந்தவா் முகம்மத்தன்வீா். இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் வெள்ளிக்கிழமை குழந்தை உள்பட குடும்ப உறுப்பினா்கள் 5 போ் இருந்துள்ளனா். அப்போது வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசி திடீரென தீ பற்றி வெடித்தது. இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து வீட்டில் இருந்தவா்களை பத்திரமாக மீட்டனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தில் ஏற்பட்ட பொருள்கள் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.