லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செங்கல் சூளையில் தீ விபத்து

கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:36 am IST

திருவாரூா் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவாரூா் அருகே தப்பளாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளை வருகிறாா். இதனிடையே, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கற்கள் மீது ரூ. 30,000 மதிப்பிலான இரண்டு தாா்பாய்களை மூடி பாதுகாப்பாக வைத்து விட்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அங்குசென்று சுரேஷ் பாா்த்தபோது, இரண்டு தாா்பாய்களும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதைத்தொடா்து சுரேஷ் தாலுகா போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அந்தப் புகாரில், மதுபோதையில் சிலா் அருகில் இருந்த மூங்கில் காடுகளை சில நாள்களுக்கு முன்பு தீவைத்துச் சென்றதாகவும், தொடா்ந்து அவா்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.