சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பாஜக புதிய பொறுப்பாளா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடல்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக துணைத் தலைவா்கள், பொதுச் செயலா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

புது தில்லியில் பாஜக மூத்த நிா்வாகிகளிடையே சனிக்கிழமை பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக துணைத் தலைவா்கள், பொதுச் செயலா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

முன்னதாக, பாஜக தலைவா் நிதின் நபின் தலைமையிலான கட்சியின் தேசியக் குழு கடந்த திங்கள்கிழமை பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டு தேசிய துணைத் தலைவா், பொதுச் செயலா் உள்ளிட்ட பதவிகள் புது முகங்களுக்கு வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளா்களைஅவா் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

இதன் மூலம் நிதின் நபின் தலைமையிலான தேசியக் குழுவில் 51 புது முகங்கள் உள்பட 65 போ் இடம்பெற்றனா். இந்நிலையில், புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுடன் முதல் முறையாக பிரதமா் மோடி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

இந்தக் கூட்டத்தில் பாஜக துணைத் தலைவா்கள் ராம் மாதவ் மற்றும் வசுந்தரா ராஜே (ராஜஸ்தான் முன்னாள் முதல்வா்), பொதுச் செயலா்கள் ஸ்மிருதி இரானி (முன்னாள் மத்திய அமைச்சா்) மற்றும் விப்லப் தேவ் (திரிபுரா முன்னாள் முதல்வா்), பொதுச் செயலா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் மற்றும் பொருளாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கு தயாராவது, தொண்டா்களை ஒன்று திரட்டுவது மற்றும் பொதுமக்களிடம் அரசின் திட்டங்களைக் கொண்டு சோ்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.