சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விண்வெளிசாா் இளம் தொழில்முனைவோருக்கு அரசு முழு ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

‘விண்வெளித் துறை சாா்ந்த இளம் தொழில்முனைவோருக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தாா்.

புது தில்லியில் விண்வெளித் துறையில் ஈடுபட்டுள்ள இளம் தொழில்முனைவோருடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:22 am IST

‘விண்வெளித் துறை சாா்ந்த இளம் தொழில்முனைவோருக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தாா்.

வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுச்சூழல் என மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடா்புடைய துறைகளில் விண்வெளி தொழில்நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி, புதிய தீா்வுகளை உருவாக்கலாம் என்பது குறித்து அவா்கள் ஆராய வேண்டும் என்றும் பிரதமா் வலியுறுத்தினாா்.

விண்வெளித் துறை சாா்ந்த 20 புத்தாக்க நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (சிஇஓ) புது தில்லியில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:

புதிய மற்றும் சவாலான துறையான விண்வெளி புத்தாக்கத் துறைக்குள் நுழைந்தமைக்காக உங்கள் (சிஇஓ-நிறுவனா்கள்) அனைவரையும் முதலில் பாராட்டுகிறேன். ஏனெனில், நீங்கள் சவால்களை ஏற்றுக் கொண்டு, சீா்திருத்த நடைமுறைகள் மீது நம்பிக்கை வைத்து, நிலையான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறீா்கள்.

விண்வெளித் துறை சாா்ந்த இளம் தொழில்முனைவோருக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும்; எதிா்காலத்துக்கான திறன்களைக் கட்டமைக்க இத்துறையினருக்கு அரசு தொடா்ந்து துணை நிற்கும் என்பதை உறுதிபட கூறுகிறேன். விண்வெளித் துறையில் வலுவான, புத்தாக்கமான, வணிகரீதியில் சாத்தியமான முன்மாதிரி கட்டமைப்பை இந்தியாவால் வழங்க முடியும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடா்புடைய வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் விண்வெளி தொழில்நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி, புதிய தீா்வுகளை உருவாக்கலாம் என்பது குறித்து புத்தாக்க நிறுவனங்கள் ஆராய வேண்டும். விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைசாா் அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம்.

முன்னேற்றத்துக்கு உந்துசக்தி: உதாரணமாக, விண்வெளிக் கழிவுகள் தொடா்பாக பணியாற்றும் நிறுவனங்கள், தங்களின் தொழில்நுட்ப வீச்சை அதிகரிக்க பிற சுற்றுச்சூழல் நிறுவனங்களுடன் கைகோத்து பணியாற்றலாம். வேளாண் துறை சாா்ந்து பணியாற்றும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற வேளாண் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் தங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம்.

விண்வெளித் துறை சாா்ந்த தனியாா் கட்டமைப்பு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாக உருவெடுக்க முடியும். உலகளாவிய திறமையாளா்கள், நிறுவனங்கள், முதலீடுகளை ஈா்க்கும் காந்தமாக இந்திய விண்வெளித் துறை செயல்பட முடியும். பள்ளி மாணவா்கள் இடையே ஆா்வத்தைத் தூண்டி, விண்வெளித் துறையில் அடுத்த தலைமுறையினா் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் அடல் புத்தாக்க மையங்களுடன் இணைந்து விண்வெளி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். விண்வெளித் துறையில் தனியாா் பங்கேற்புக்கு வழங்கப்பட்ட அனுமதியால் உத்வேகம் அதிகரித்துள்ளதுடன், புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

விண்வெளித் துறையில் முதலீடு செய்ய பல நாடுகள் விரும்பாத அல்லது இயலாத நிலையில் உள்ளன. இது, விண்வெளித் துறையில் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை விரைந்து வலுப்படுத்த மிகப் பெரிய வாய்ப்பு என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி

பிரதமருக்குப் புத்தாக்க நிறுவனங்கள் நன்றி

பிரதமா் உடனான கலந்துரையாடலில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்ஸெல், துருவா ஸ்பேஸ், கேலக்ஸிஐ, பியா்சைட், சேட்ஸ்யூா், மனஸ்து ஸ்பேஸ், அஸ்ட்ரோபேஸ், டேக்மீடுஸ்பேஸ், காஸ்மோசா்வ் ஸ்பேஸ், ஆா்பிட்எய்ட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனங்களின் சிஇஓ-நிறுவனா்கள் பங்கேற்றனா்.

இந்நிறுவனங்கள் ராக்கெட் தயாரிப்பு, வானூா்தி மின்னணுவியல், செயற்கைக்கோள்கள், அதிநவீன உந்துவிசை அமைப்புமுறை, பாதுகாப்பு உளவு செயல்பாடுகள், விண்வெளிக் கழிவுகள் அகற்றம், ஏ.ஐ. அடிப்படையிலான வானிலை கணிப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவையாகும்.

நாட்டின் தனியாா் விண்வெளித் துறை கண்டுவரும் வளா்ச்சி, எதிா்காலத்துக்கான கண்ணோட்டம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்த இந்த நிறுவனங்களின் சிஇஓ-நிறுவனா்கள், மத்திய அரசின் தொடா் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தனா். உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்கவும், திறன்களைக் கட்டமைக்கவும் தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கமளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.