லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

சுருளி அருவி.

Published On :3 ஆகஸ்ட் 2026, 10:08 pm IST
10:26 am, 3 ஆகஸ்ட் 2026

தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

10:54 am, 3 ஆகஸ்ட் 2026

ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் விலை உயர்வு!

10:54 am, 3 ஆகஸ்ட் 2026

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் முன்னிலை...

11:26 am, 3 ஆகஸ்ட் 2026

காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்

காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசாக தவெக அரசு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

11:32 am, 3 ஆகஸ்ட் 2026

ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை! மு.க. ஸ்டாலின்

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

11:46 am, 3 ஆகஸ்ட் 2026

ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அன்னையை வழிபடும் வகையில் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வல்லம்படுகை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் வழிபட்டனர்.

11:53 am, 3 ஆகஸ்ட் 2026

மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கிலிருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை தில்லி நீதிமன்றம் இன்று விடுவித்தது.

11:53 am, 3 ஆகஸ்ட் 2026

பிரஜ் பூஷண் விடுதலை!

பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கிலிருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை தில்லி நீதிமன்றம் இன்று விடுவித்தது.

12:21 pm, 3 ஆகஸ்ட் 2026

திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

1:03 pm, 3 ஆகஸ்ட் 2026

தமிழ்நாட்டில் இப்படி ஒரு நீர்வளத் துறை அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது? உதயநிதி

தமிழ்நாட்டில் இப்படி ஒரு நீர்வளத் துறை அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது? என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1:19 pm, 3 ஆகஸ்ட் 2026

குதிரை பேர வழக்கு: மேலும் இருவருக்கு ஜாமீன்

தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3:05 pm, 3 ஆகஸ்ட் 2026

மகாராஷ்டிர அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா ? டிடிவி தினகரன் கேள்வி

தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிர மாநில அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

3:18 pm, 3 ஆகஸ்ட் 2026

விரைவில் மேல்முறையீடு!

பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

3:18 pm, 3 ஆகஸ்ட் 2026

கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

3:45 pm, 3 ஆகஸ்ட் 2026

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.

3:53 pm, 3 ஆகஸ்ட் 2026

பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்றால், பாவங்கள் போய்விடுமா? - மு.க. ஸ்டாலின்

விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

3:55 pm, 3 ஆகஸ்ட் 2026

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகத்துக்கு எதிராக, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

3:55 pm, 3 ஆகஸ்ட் 2026

ரூ. 12-க்கு மில்க் ரஸ்க்! ஆவின் நிறுவனம் அறிமுகம்!

தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, குறைந்த விலையில் ரஸ்க் பாக்கெட் விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கியுள்ளது.

4:59 pm, 3 ஆகஸ்ட் 2026

ஓடிடியில் ஜன நாயகன் எப்போது?

5:26 pm, 3 ஆகஸ்ட் 2026

எனது வெற்றி பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்

பிகார் இடைத்தேர்தலில் தன்னுடைய வெற்றி என்பது பாஜக தலைமைக்கான செய்தி என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளார்.

5:29 pm, 3 ஆகஸ்ட் 2026

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7:48 pm, 3 ஆகஸ்ட் 2026

ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி!

உத்தரப் பிரதேசத்தில் தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவி, சக ஆசிரியர்கள் முன்பு தனது காலணியைக் கொண்டு அவரை சரமாறியாக அடித்துள்ளார்.

7:48 pm, 3 ஆகஸ்ட் 2026

கூகுள் 11 ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?

கூகுள் பிக்சல் 11 வரிசை ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

7:49 pm, 3 ஆகஸ்ட் 2026

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட்டின் சுதந்திர தின சலுகைகள்!

ஆகஸ்ட் சுதந்திர தின மாதத்தையொட்டி ஃபிளிப்கார்ட் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

8:19 pm, 3 ஆகஸ்ட் 2026

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 அமைச்சர்கள் பதவியேற்பு!

 பெங்களூரில் உள்ள லோக் பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் 20 புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

10:08 pm, 3 ஆகஸ்ட் 2026

பங்கிப்பூரை ஒரே நாளில் பெங்களூராக மாற்ற முடியாது: பிரஷாந்த் கிஷோர்

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற பங்கிப்பூர் தொகுதியில் ஒரே இரவில் பெங்களூருவாக மாற்ற முடியாது என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் திங்கள்கிழமை (ஆக. 3) தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.