லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கிலிருந்து பிரிஜ் பூஷண் விடுதலை செய்யப்பட்டது பற்றி...

brij bhusan

பிரிஜ் பூஷண் சரண் சிங் - கோப்புப்படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 1:12 pm IST

பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கிலிருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை தில்லி நீதிமன்றம் இன்று விடுவித்தது.

இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்பட 6 பேர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த 2023 ஆம் ஆண்டு புகார் அளித்தனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து, பிரஜ் பூஷண் மற்றும் டபிள்யுஎஃப்ஐ முன்னாள் உதவிச் செயலாளராக இருந்த வினோத் தோமர் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354, 354ஏ, 354டி, 506(1) ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புகார் அளித்தவர்களில் ஒரு வீராங்கனை மைனா் பெண் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொய்யான புகாரை அளித்ததாக விசாரணையின் இடையே அவரது தந்தை திடுக்கிடும் கூற்றை முன்வைத்தார்.

இதையடுத்து, கடந்தாண்டு மே மாதம், மைனா் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி தில்லி காவல்துறை அளித்த பரிந்துரையை ஏற்று, பிரஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து போக்சோ பிரிவை நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் பிரஜ் பூஷண் மற்றும் வினோத் தோமர் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி அஸ்வினி பன்வார் இன்று உத்தரவிட்டார்.

Summary

Wrestlers sexual harassment case - Brij Bhushan acquitted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.