மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 11 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவர் என 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 39.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, கிழக்கு பர்தமான் தொகுதியில் 44.50 சதவிகிதமும், ஹூக்ளியில் 43.12 சதவிகிதமும், நாடியா தொகுதியில் 40.34 சதவிகிதமும், ஹவுரத் தொகுதியில் 39.45 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல் மற்றும் இரண்டாவது கட்டமாக இன்று பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
Summary
The Election Commission has released the 11:00 AM polling figures for the second phase of the Assembly elections in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 5 மணி வரை 89.99% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


