தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மேற்கு வங்கம்: 5 மணி வரை 89.99% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கப் பேரவைத் தேர்தல் மாலை 5 மணி நிலவரத்தைப் பற்றி...

News image

வாக்குப்பதிவு - PTI

Updated On :29 ஏப்ரல் 2026, 5:46 pm IST

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில்,மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளனன.

அதிகபட்சமாக, கிழக்கு பர்தமான் தொகுதியில் 92.46 சதவிகிதமும், ஹூக்ளியில் 90.34 சதவிகிதமும், நாடியா தொகுதியில் 90.28 சதவிகிதமும், ஹவுரத் தொகுதியில் 89.44 சதவிகிதமும், வடக்கு கொல்கத்தாவில் 87.77 சதவிகிதமும், தெற்கு கொல்கத்தாவில் 86.11 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவர் என 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் முதல் மற்றும் இரண்டாவது கட்டமாக இன்று பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.