ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

கேரளத்தில் சமீபமாக பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரிப்பு குறித்து...

News image

கேரளத்தில் அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள் - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:43 pm IST

கேரளத்தில் சமீபகாலமாக பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளால் சூழப்பட்டிருப்பதுடன், அப்பகுதிகளில் பாம்புகளும் அதிகம் காணப்படும். இந்த நிலையில், கேரளத்தில் அதிகரித்த கோடை வெப்பத்தின் காரணமாக, பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 54 பேர் பாம்புக் கடிக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, திங்கள்கிழமை (ஏப். 27) ஒருநாள் மட்டுமே 16 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்களையடுத்து, மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களிலும் பாம்புக் கடிக்கான எதிர்ப்பு மருந்துகளை தயாராக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாம்புக் கடி பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் மாநில சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதனிடையே, பாம்புக் கடி சம்பவங்கள் தொடர்பாக மாநிலத்தில் உள்ள இன்ஃப்ளூன்சர்கள் நகைச்சுவையாக ரீல்ஸ்களும் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Keralam issues guidelines as snakebite incidents rise amid heatwave

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.