கேரளத்தில் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சியிடம் துணை முதல்வர் பதவியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கோரவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எம்.ஏ. சலாம் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி துணை முதல்வர் பதவி கேட்பதாக வெளியான செய்திகளுக்கு அக்கட்சியின் கேரள மாநிலக் குழுவின் பொதுச்செயலாளர் பி.எம்.ஏ. சலாம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, வியாழக்கிழமை (மே 7) அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“துணை முதல்வர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை எழுந்தால் ஐயூஎம்எல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும். மேலும், அமைச்சரவையில் இடம்பெறும் அனைத்து துறைகளும் முக்கியமானவை. ஐயூஎம்எல் சார்பில் யாரெல்லாம் அமைச்சர் பதவி வகிப்பார்கள் என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ஐயூஎம்எல் கட்சி தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தர மறுப்பு தெரிவித்து திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
IUML, has stated that the party has not demanded the post of Deputy CM from the Congress party in Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!

கேரளத்தின் புதிய முதல்வர் யார்? மும்முனைப் போட்டியில் சிக்கிய காங்கிரஸ்!

பாபநாசம் தொகுதியில் பின்னடைவிலிருந்து முன்னேறி வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


