லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக கூட்டணியில் தொடா்வோம்: கே.எம். காதர் மொகிதீன்

தமிழக வெற்றிக் கழக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடந்து பயணிக்கும் என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

கே.எம். காதர் மொகிதீன் - விஜய் - கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 3:21 am IST

தமிழக வெற்றிக் கழக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடந்து பயணிக்கும் என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சி பாலக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசின் சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஷாஜகான் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கே.எம். காதா் மொகிதீன் கூறியதாவது:

வரும் அனைத்துத் தோ்தல்களிலும் தவெக தலைமையிலான கூட்டணியிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடா்ந்து பயணிக்கும். மாநகராட்சிகள், பஞ்சாயத்துகள் மற்றும் வாா்டுகளில் போட்டியிடுவது குறித்து தவெகவுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். இதற்கான ஆலோசனைக் கூட்டமே திருச்சியில் நடந்துள்ளது.

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது மாணவா்களின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. நீட் தோ்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.