மும்பையில் சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
மகராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையின் ஜே.ஜே மார்க் பகுதியில் வசித்து வந்தவர் அப்துல்லா (40). அவரது மனைவி நஸ்ரின் (35). இவர்களது மகள்கள் ஜைனப் (13), ஆயிஷா (16). இவர்கள் கடந்த 25ஆம் தேதி தங்களது வீட்டில் குடும்ப விருந்து ஒன்றை நடத்தினர். அவர்கள் அனைவரும் ஐந்து விருந்தினர்களுடன் சேர்ந்து மதிய உணவாக சிக்கன் புலாவ் சாப்பிட்டுள்ளனர்.
விருந்தினர்கள் சென்ற பிறகு, அந்த குடும்பத்தினர் மட்டும் தர்பூசணி பழத்தை சாப்பிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. விருந்து முடிந்த சிறிது நேரத்திலேயே அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலில் அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் நிலைமை மோசமடைந்ததால் ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அனைவரும் பலியாகினர். குடும்பத் தலைவர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை இரவு பலியானார் .
"முதற்கட்ட விசாரணையில், இது தர்பூசணியால் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மை என்று தோன்றுகிறது. ஏனெனில் 'புலாவ்' மட்டும் சாப்பிட்ட விருந்தினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை," என்று அந்த அதிகாரி கூறினார். மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூராய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜே.ஜே மார்க் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
A couple and their two minor daughters died due to suspected food poisoning from eating watermelon following a family get-together at their home in south Mumbai, police said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி! யார் தெரியுமா?
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


