தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தேசிய தலைநகர் தில்லியின் கிழக்குப் பகுதியான ஷாதாராவின் விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
தீவிபத்து சம்பவம் குறித்த அதிகாலை 3.47 மணிக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, சுமார் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், ஏசி வெடித்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டடத்தின் உள்ளிருந்து 10 முதல் 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
Summary
At least nine people have died, and four others have been injured in a fire that broke out in a four-storey residential building in Delhi's Vivek Vihar in the early hours of Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
